//]]>3

Google +

வெள்ளி, 20 ஜூலை, 2012

கதிர்காமம் எசல பெரஹெராவிற்கு 1,500 பொலிஸார் பாதுகாப்பு பணியில்


கதிர்காமம் எசல பெரஹெராவிற்கு செல்லும் பக்தர்களின் பாதுகாப்பு கருதி 1,500 பொலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மாணவிமீது பாலியல் பலாத்காரம்


பாடசாலை மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றச்சாட்டில் நெலுவ பிரதேசத்திலுள்ள கனிஷ்ட பாடசாலையொன்றில் பணியாற்றும் ஆசிரியர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

13 வயது பாடசாலை சிறுமியை 73 வயது வதியோதிபர் பாலியல் பலாத்காரம்


மிகக் குறுகிய காலத்திற்குள் சிறுவர் துஷ்பிரயோகம் அதிகம் பதிவாகிய நாவலப்பிட்டிய பிரதேசத்தில் 13 வயது பாடசாலை சிறுமியை 73 வயது வதியோதிபர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவமொன்றும் தற்போது பதிவாகியுள்ளது.

கொழும்பில் சிறுவர்கள் விபச்சாரம்


கொழும்பை அண்டிய கிராமப் பகுதி சிறுமிகளை 1,000 ரூபாவிற்கு விற்பனை செய்து வந்த பாதள உலகக்குழு தலைவர் ஒருவர் மாளிகாவத்தை பகுதியில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தப் பாதாள உலககுழு தலைவர் தற்போது பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் கொழும்புக்கு வெளியில் இருந்து அழைத்து வரப்பட்ட மூன்று யுவதிகளையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மணமகள் காதலனுடன் ஓடியதால் மாணவிக்கு கட்டாய திருமணம்!


நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள முத்துகாளிப்பட்டி ஆதி திராவிட காலனியைச் சேர்ந்தவர் பொன்னுசாமி. இவருக்கு 2 மகள்கள். மூத்த மகள் ராணிக்கும் காளப்ப நாயக்கன்பட்டியைச் சேர்ந்த மாரியப்பன் (22) என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

செலவு கூடிய மாவட்டமாக யாழ்ப்பாணம்


இலங்கையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், தனிநபர் ஒருவர் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்ய குறைந்தபட்ஷம் 3,307 ரூபாவினை செலவு செய்ய வேண்டி இருந்தது. எனினும், இது மாவட்டங்களைப் பொறுத்து வேறுபட்டதுடன், தனிநபர் வாழ்க்கைச் செலவு ஆகக் கூடிய மாவட்டமாக யாழ்ப்பாணம்(ரூபா.3,555) காணப்படுவதனை புள்ளிவிபரத் தரவுகள் காட்டுகின்றன.

புனித ரமழான் ஆரம்பம்


"நம்பிக்கை கொண்டவர்களே! உங்களுக்கு முன்பிருந்தவர்கள் மீது நோன்பு கடமையாக்கப்பட்டது போன்று உங்கள் மீதும் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் நீங்கள் "தக்வா' (இறையச்சம்) உள்ளவர்களாகலாம்'' (சூரத்துல் பக்கரா)

செவ்வாய், 17 ஜூலை, 2012

இலங்கை இராணுவத்தினர் இராணுவ கல்லூரியில் நடைபெறும் மாநாட்டிலிருந்து வெளியேற்றப்பட்டனர்

தமிழகக் கட்சிகளின் எதிர்ப்பை அடுத்து குன்னூர் வெலிங்டன் இராணுவ கல்லூரியில் நடைபெறும்  கருத்தரங்கில் பங்கேற்றிருந்த இலங்கை இராணுவத்தினர் இன்று காலை மாநாட்டிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

யாழ்.நகரில் ஆட்டோ விபச்சாரம்

யாழ்.நகரில் ஆட்டோ சேவையில் ஈடுபடும் சாரதிகளின் மூலம் அரங்கேற்றப்படும் விபச்சாரம்,காவல்துறையினர் கண்டும் காணதது போல் விட்டுவிடுகின்றார்கள்.
குறிப்பாக யாழ்.பஸ்நிலையத்தினை மையமாகக் கொண்டு இயங்கிவரும் விபச்சாரம் மாலை வேளைகளில் களைகட்டிக்காணப்படுகின்றது. பஸ்நிலையத்திற்குள் நிற்கும் விலை மாதுக்களிடம் நேரடியாகவே அல்லது பஸ்நிலையத்தினைசுற்றி நிற்கும் ஆட்டோ சாரதிகளின் மூலமாகவே விலை மாதுக்களைப் பெற்றுக் கொள்ளலாம்.

இராணுவ மயமாக மாறும் வவுனியா


எதிர்வரும் சனிக்கிழமை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வவுனியாவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் சம நேரத்தில் இடம்பெற்ற இரு தாக்குதல்கள்


வவுனியா சிறைக்குள் கொடூரமான முறையில் தாக்கி படுகொலைசெய்யப்பட்ட அரசியல் கைதி நிமலரூபனின் படுகொலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, நாளை புதன்கிழமை நெல்லியடி பேருந்து நிலையத்தில் அமைதிவழியிலான ஆர்ப்பாட்ட பேரணியை நடாத்துவதற்கான முனைப்பில் ஈடுபட்டுள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் முக்கிய உறுப்பினர்களின் வீடுகள் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை சிங்கள புலனாய்வாளர்கள் தாக்குதலுக்குள்ளாக்கப்பட்டுள்ளது. 

மூர் வீதியில் கைக்குண்டுகள் மீட்பு

மன்னார் மூர் வீதி காட்டுப்பள்ளிவாசல் பகுதிக்குப் பின் பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்றிற்குப் பின்புறமாக உள்ள மலசல கூடத்திற்கு அருகில் மறைத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு கைக்குண்டுகளை நேற்று திங்கட்கிழமை காலை முருங்கன் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

திங்கள், 16 ஜூலை, 2012

மன்னாரின் பல பகுதிகளில் நுளம்புகளின் பெருக்கம் அதிகரித்துள்ளது


கடந்த சில நாட்களாக மன்னாரின் பல பகுதிகளில் குறிப்பாக நீரோடைகள் காணப்படும் பிரதேசங்களில் நுளம்புகளின் பெருக்கம் மிகக் கூடுதலாக உள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர். 

ஊடகவியலாளர்கள் இருவருக்கு கொலை மிரட்டல்

மன்னார் பிராந்திய ஊடகவியலாளர்கள் இருவருக்கு மன்னார் உப்புக்குளம் கிராமத்தைச் சேர்ந்த சிலரால் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.

மல்லாவியில் கிணற்றில் வீழ்ந்து கர்ப்பிணி பெண் மரணம்!


முல்லைத்தீவு மல்லாவி பாலிநகர் பகுதியில் கிணற்றில் வீழ்ந்த இளம் கர்ப்பிணிபெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ஞாயிறு, 15 ஜூலை, 2012

இலங்கையில் கல்வி தேல்வி


எத்தியோப்பியா போன்ற அதிக வறுமை மிக்க நாடுகள் தேசிய உற்பத்தியில் 4 சத வீதத்தை கல்விக்காக ஒதுக்கும் நிலையில் இலங்கை நூற்றுக்கு இரண்டு வீதத்துக்கும் குறைவாக ஒதுக்குகின்றமை மூலம் நாட்டின் நிர்வாகத் தலைவர் கல்வித்துறை குறித்து கொண்டுள்ள நிலைப்பாடு தெளிவாகிறது என  பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்க சம்மேளனத்தின் உப தலைவர் வணக்கத்திற்குரிய தம்பர அமில தேரர்  தெரிவித்துள்ளார்.கல்விக்காக ஒதுக்கப்படும் நிதியை அதிகரிக்குமாறு சம்மேளனம் விடுத்துள்ள கோரிக்கை அரசை மகிழ்ச்சிப்படுத்தும் எனவும் அப்படி செய்ததன் பின் அரசாங்கமே முன்னேறும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

2 அரை வருடத்தில் 2500 சிறுமிகள்மீது பாலியல் ரீதியான துன்புறுத்தல்கள்


கடந்த இரண்டரை ஆண்டு காலப்பகுதியில் 2500 சிறுமிகள் மிகவும் மோசமான முறையில் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டுள்ளனர்.

யுத்தத்தின் போது கைவிடப்பட்ட வாகனம்கள் ஏலத்தில்


வன்னியில் நடைபெற்ற யுத்தத்தின்போது பொது மக்களால் கைவிடப்பட்ட வாகனங்களை உரியவர்கள் எதிர்வரும் 30 திகதிக்கு முன்னர் அடையாளம் காட்டி பெற்றுக்கொள்ளுமாறு கிளிநொச்சி மாவட்டச் செயலகம் அறிவித்துள்ளது.

பா.உ. சந்திரகுமாரின் வாகனத்துடன் மோதி முச்சக்கர வண்டி சாரதி படுகாயம்


பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமாரின் வாகனத்துடன் மோதி முச்சக்கர வண்டி விபத்திற்குள்ளானதுடன், முச்சக்கர வண்டியை ஓட்டி வந்த இளைஞர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்,போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

திடீர் செல்வந்தர்களாக மாறிய பொலிஸ் அதிகாரிகள் மீதுவிசாரணை


நாட்டில் திடீர் செல்வந்தர்களாக மாறிய பொலிஸ் அதிகாரிகள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சந்திரிக்கா பண்டாரநாயக்க தலைமையில் புதிய அரசியல் அமைப்பு


மகிந்த ராஜபக்ஷ அரசாங்கம் குறித்து வெறுப்படைந்துள்ள அரசாங்கத்தில் பலர், முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க தலைமையில் புதிய அரசியல் அமைப்பு ஒன்றை ஏற்படுத்த ரகசியமான பேச்சுவார்த்தைகளை நடத்தி வருவதாக தெரியவருகிறது. இதனடிப்படையில் சந்திரிக்காவின் தலையீட்டில், வெள்ளை அலரி என்ற பெயரில் ரகசியமான அமைப்பு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

யாழில் மாணவிகள் மீது கேலி செய்தால் கைதுசெய்யப்படும்


பெண்கள் பாடசாலை முன்னால் நின்று மாணவிகளுக்கு பகிடி சேஷ்டை விடுவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடும் இளைஞர்கள் மீது காவல்துறை யாழ். குடா நாட்டில் பரவலாக நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளார்கள்.

காற்றில் இருந்து சக்தி எடுக்க முனைந்த பெண் மரணம்

உணவு, தண்ணீர் இல்லாமல் காற்றில் இருந்து நேரடியாக சக்தி எடுத்துக் கொள்வதாக கூறி விரதம் இருந்த சுவிட்சர்லாந்து பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.

இலங்கை அகதிகளை திருப்பி அனுப்ப தீர்மானித்துள்ள சுவீடன்!

இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சிறீலங்கா  படையினருக்கும் இடையிலான யுத்தம் முடிவடைந்தும் இன்னமும் அங்கு அமைதியான சூழ்நிலை தோன்றாத நிலையில் சுவீடனில் உள்ள இலங்கை யுத்த அகதிகளை இலங்கைக்கு விரைவில் திருப்பி அனுப்ப அந்த நாட்டு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக பரபரப்பான தகவல்கள் கிடைத்துள்ளது.

இந்திய மருத்துவத்துறையில் தமிழன் சாதனை

இந்தியாவிலேயே அதிக வயது கூடிய மருத்துவ பட்டப்படிப்பு மாணவர் ஒரு இலங்கைத் தமிழர் என இந்தியாவின் பிரபல ஆங்கில நாளிதழான த டைம்ஸ் ஒப் இந்தியா சுட்டிக் காட்டியுள்ளது.

அவுஸ்திரேலியாவுக்கு போகவிருந்த 109 பேர் மட்டக்களப்பு கடலில் கைது!


சட்டவிரோதமாக படகு மூலம் இலங்கையின் மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடா கடற்பரப்பின் ஊடாக அவுஸ்திரேலியா நோக்கிச் செல்ல முயற்சித்த 109 இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் குற்றச்சாட்டு பொய்யானவை


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் குற்றச்சாட்டுஅடிப்படையற்றது என இராணுவம் அறிவித்துள்ளது.

வடமாகாண ஆளுணர் சந்திரசிறி யாழ் வைத்தியசாலையில்


வடமாகாண ஆளுணரும் முன்ணாள் யாழ் மாவட்ட இராணுவத் தளபதியுமான சந்திரசிறி யாழ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

புலிகளுக்கு இந்தியாவின் தடை நீடிக்கிறது



தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான தடையை இந்திய அரசாங்கம்நீடித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

வெள்ளி, 13 ஜூலை, 2012

சிறுவர் இல்லத்தில் உள்ள 29 சிறுமிகள் ஆர்ப்பாட்டம்


வவுனியா வைரவபுளியங்குளம் பகுதியில் உள்ள சிறுவர் இல்லத்தில் உள்ள 29 சிறுமிகள் நேற்று இரவு 8 மணியளவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமது இல்லத்திற்கு நியமிக்கப்பட்டுள்ள காவலாளியை மாற்றவேண்டும், விடுதியின் இரவு மேற்பார்வையாளரை மாற்றவேண்டும், தமக்கான உணவுகள் சிறந்த வகையில் வழங்கப்படுவதில்லை, தமக்கு விளையாடுவதற்கு அனுமதிக்கப்படவதில்லை என தெரிவித்து அதற்கான தீர்வை பெற்றுத்தருமாறு கோரியே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

யாழ் பல்கழலை மாணவர் ஒன்றிய செயலாளராக தர்சானந்


யாழ் பல்கழலை மாணவர் ஒன்றிய செயலாளராக தர்சானந் தெரிவு செய்யப்பட்டுள்ளார். தமிழ் மக்களின் அடையாளமாக திகழும் கல்வியை போதிக்கும் தமிழர் தாயகத்தின் உயர் கல்விக் கூடமான யாழ் பல்கலைக் கழக்கத்தில் இயக்க சக்தியில் பெரும் செல்வாக்கு செலுத்தும் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தெரிவு (11-07-2-12) அன்று நடைபெற்றது.

ஜனாதிபதி மஹிந்தரை கவுக்க சதி

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தின் மீது அதிருப்தி அடைந்துள்ளவர்கள் புதிய அரசியல் அமைப்பை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

சமையல் எரிவாயு விலை குறைப்பு

இலங்கையில் சமையல் காஸின் விலை 150 ரூபாவால் குறைக்கப்படவுள்ளது. இந்த விலை குறைப்பு இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் என நிதியமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
லித்ரோ எனப்படும் அண்மையில் அரசாங்கத்தால் பங்கு கொள்வனவு செய்யப்பட்ட எரிவாயு நிறுவனவே இந்த விலைக்குறைப்பை அறிவித்துள்ளது.

6.5 கோடி அபராதம் செலுத்தாது தப்பிய டோனி!


டோனி மீது 6.5 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கோரி தொடரப்பட்ட வழக்கை கர்நாடகா ஐகோர்ட் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

ஆண்கள் பற்றி பெண்களுக்கு தெரியாதவை


எப்போதும் பெண்களுக்கு எல்லாமே தெரியும் என்று நினைக்கக் கூடாது. மேலும் அவர்களுக்கு ஆண்களைப் பற்றி நிறைய விஷயங்கள் தெரியாது.
சொல்லப் போனால் ஆண்கள் நிறைய விஷயத்தில் பெண்களை விட மிகவும் திறமையானவர்கள்.

பில்லா 2 ஐ பார்த்து ரசித்த சூப்பர் ஸ்டார்


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கும் தல அஜித் க்கும் இடையில் சிறப்பான உறவுமுறை தொடரப்பட்டு வருகிறது. இவர்கள் இருவரும் மற்றையவரின் திரைப்படங்களை தவறாது பார்த்துவிடுவது வழமை. அந்த வகையில் சூப்பர் ஸ்டார், பில்லா 2 ஐ பார்த்துவிட்டு அஜித் இன் செயற்பாட்டை பாராட்டியதாக தகவல் வெளியாகியுள்ளது.

வில்லியாக : ரம்யா


அருண் விஜய்யுடன் ‘தடையற தாக்க’ படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்தவர் ரம்யா. ‘கண்டுபிடி, கண்டுபிடி’ படத்தில் சீமான் ஜோடியாக நடிக்கிறார். பாலு மகேந்திரா இயக்கும் படமொன்றிலும் நடிக்கிறார்.

கடலோரத்தில் உல்லாசம்


உலக அளவில் சுற்றுலாப் பயணிகளை அதிக அளவில் கவர்கின்ற இடமாக இலங்கையின் கடற்கரைகள் விளங்குகின்றன.
இலங்கையின் பிரபல கடலோரங்களில் ஒன்று பெந்தோட்டை கடற்கரை. இது களுத்துறை மாவட்டத்தில் அமையப் பெற்று உள்ளது.
இங்கு கடந்த மாத நடுப்பகுதியில் கடலோர உல்லாச விழா இடம்பெற்றது.
இதன் போது எடுக்கப்பட்ட படங்களைப் பாருங்கள்.

பாதுகாப்பற்ற நிலையில் 90,000 சிறார், சிறுமியர்கள்


இலங்கையில் தற்போது தொடர்ச்சியாக சிறார்கள் மீது பாலியல் துன்புறுத்தல்கள் என்றும் இல்லாதவாறு அதிகரித்துள்ளன.

யாழ். போதனா வைத்தியசாலையின் பழுதடைந்த பிணவறைக் குளிரூட்டி


யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பிணவறைக் குளீரூட்டிகள் யாவும் பழுதடைந்து விட்டதால் பிணவறையில் வைக்கப்பட்ட பெண்ணொருவருடைய சடலம் அழுகிப் பழுதடைந்துள்ளதால் வைத்தியசாலை நிர்வாகம் பல்வேறு பிரச்சினைகளை எதிர் நோக்கியுள்ளது.

உளவாளிகளை புலிகள் படுகொலை செய்தனர்


உளவாளிகளை தமிழீழ விடுதலைப் புலிகள் படுகொலை செய்ததுடன், தமிழ்வர்த்தக நிலையங்களில் களவாடினர் என முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர் நிரோமி டி சொய்சாதெரிவித்துள்ளார்.

வர்ணக் கோழிக்குஞ்சுகள் வெள்ளையாகும் அதிசயம்


தென்பகுதியிலிருந்து வரும் சிங்கள வியாபாரிகள் முல்லைத்தீவுப் பகுதியில் மக்களைப் பல்வேறு வழிகளிலும் ஏமாற்றி வருகின்றனர். இவர்களுக்கு இராணுவத்தினரின் ஆதரவு இருப்பதால் சிங்கள வியாபாரிகளின் தில்லுமுல்லுகள் பற்றி வாய்திறக்க முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மக்கள் தெரிவிக்கின்றனர்.

விடுதலைப் புலிகளின் வீடியோ காட்சி பார்த்தவர்கள் கைது!



மூதூரில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் யுத்தக் காட்சியை பார்த்ததற்காக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் முன்னாள் போராளிகள் எனவும் தெரிய வருகின்றது.   அத்தோடு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் யுத்தக் காட்சியைக் கொண்ட 6 நிமிட மெமரி கார்ட்டொன்று கைப்பற்றப்பட்டுள்ளது.   இச்சந்தேக நபர்கள் இவ்வீடியோவை பார்த்துக்கொண்டிருந்தபோது மெமரி கார்ட் கைப்பற்றப்பட்டது. இச்சந்தேக நபர்கள் 50,000 ரூபா பணத்தையும் வைத்திருந்தனர்.   இவர்கள் மூதூர், பதனபுரம் பகுதியைச் சேர்ந்தவர்களெனத் தெரிவிக்கப்படுகின்றது.   இச்சந்தேக நபர்களிடம் மூதூர் பொலிஸாரின் பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் மேலதிக விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.

நாடு பூராக 10,648 பேரைக் கைது செய்த பொலிஸார்!


நாடு முழுவதும் மேற்கொண்ட சுற்றி வளைப்புக்களில் இருந்து கடந்த 21 நாட்களுக்குள் குற்றவாளிகளாக இனங்காணப்பட்டு பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்ட 10,648 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ஹோஹண ஊடகங்களுக்கு தகவல் அளித்துள்ளார்.

முன்னாள் போராளிகள் தெற்காசிய விளையாட்டு விழாவுக்கான பயிற்சிக்குழாமில்


புனர்வாழ்வு பெற்றுவரும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்கள் 16 பேர் அடுத்த வருடம் புதுடில்லியில் நடைபெறவுள்ள தெற்காசிய விளையாட்டு விழாவில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்துவதற்கான குழாமில் பயிற்சி பெற்றுவருவதாக விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் ஹர்ஷா டி அபேகோன் தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலியக் கனவு! மேலும் 41 பேர் திருமலையில் கைது



அவுஸ்திரேலியாவுக்கு இலங்கையிலிருந்து அகதிகளாகச் செல்லுபவர்களின் எண்ணிக்கை என்றுமில்லாதவாறு அதிகரித்துள்ளது.

கைத்தொழிற் பேட்டைகள் தொடர்பில் கலந்துரையாடல்


பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சினது கைத்தொழில் அபிவிருத்தி சபையின் கீழான தொழில் முதலீட்டாளர் சங்கத்தினர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களைச் சந்தித்து அவர்கள் எதிர்கொண்டுவரும் பிரச்சினைகள் தொடர்பில் எடுத்துரைத்தனர்.

வியாழன், 12 ஜூலை, 2012

கைதிகளிடம் அதிநவீன தொலைபேசிகள்


காலி சிறைச்சாலையில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கை யில் 44 கையடக்கத் தொலைபேசிகள் கைப்பற்றப் பட்டுள்ளன. நேற்று இரவு இந்த திடீர் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இணைய இணைப்பு வசதிகளுடன் கூடிய அதிநவீன தொலைபேசிகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சோதனை நடத்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இலங்கையின் தேசிய விளையாட்டு அணிகளில் விடுதலைப் புலிகள்


இலங்கையின் தேசிய விளையாட்டு அணிகளில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் போராளிகள் எட்டுப் பேர் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளதாக, விளையாட்டுத்துறை அமைச்சின் ஊடகச்செயலாளர் ஹர்ச அபயகோன் தெரிவித்துள்ளார்.

காதலிக்கு குழந்தை- ஏற்க மறுக்கும் காதலன்


கோம்பாவில் 04ம் வட்டாரம் புதுக்குடியிருப்பை சேர்ந்த பெண்ணொருவரை காதலித்து பாலியல்றீதியான துஸ்பிரயோகம் செய்து விட்டு தற்போது திருமணம் செய்ய மறுக்கிறார். இந்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது

இலங்கைக்கான வெளிநாட்டுத் தூதுவர்கள் நெடுந்தீவு விஜயம்

இலங்கைக்கான வெளிநாட்டுத் தூதுவர்கள் நெடுந்தீவு பகுதிக்கு இன்றைய தினம் விஜயம் மேற்கொண்டனர். 

யாழில் சொகுசு புகையிரத நிலையம்

சர்வதேச தரத்துடனான நிலையில் யாழ். புகையிரத நிலையத்தின் நிர்மாணப் பணிகளை விரைவில் ஆரம்பிக்கவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஓட்டோவில் எருமை! கடத்தல்

முச்சக்கர வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட எருமை மாட்டினை நேற்று இரவு வீதிப்போக்குவரத்து நடவடிக்கையில் ஈடுபட்ட பொலிஸார் மீட்டுள்ளதுடன் குறித்த முச்சக்கர வாகனத்தை கைப்பற்றிய பொலிஸார் அதன் சாரதியையும் கைது செய்துள்ளனர். 

இலங்கையில் மின்சார ரயில் சேவை விரைவில்

இலங்கையில் முதலாவது மின்சார ரயில் சேவையினை மேற்கொள்ளும் திட்டம் இறுதிவடிவத்திற்கு வந்துள்ளதாக இலங்கைப் புகையிரதத் திணைக்களம் அறிவித்துள்ளது.

முதற்கட்டமாக வியாங்கொடையிலிருந்து களுத்துறை வரைக்கும் மின்சார ரயில் சேவையினை ஆரம்பித்து இயக்கவுள்ளதாக இலங்கை புகையிரதத் திணைக்கள திட்டப் பணிப்பாளர் விஜய சமரசிங்க தெரிவித்தள்ளார். இதற்காக இரண்டு மின்சார உப நிலையங்களை றாகம மற்றும் பாணந்துறையில் நிர்மாணிக்கவும் திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் இலங்கை மின்சார சபை மற்றும் போக்குவரத்து அமைச்சு ஆகியவற்றின் அனுசரணையுடன் சொகுசு மின்சார ரயில் சேவையினை மேற்கொள்ளவும் திட்டமிட்டிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.